‘தளபதி 65’ படத்தில் இணைந்த ‘நண்பன்’ பட பிரபலம்.!

Published by
Ragi

தளபதி-65 படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

விரைவில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கும் தளபதி-65 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.ஏற்கனவே தளபதி-65 படத்தின் எடிட்டராக நிர்மல் குமார் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது தளபதி 65 படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மனோஜ் பரமஹம்சாவிடம் சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

2 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

2 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

3 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago