காலை உணவுக்கு எப்பொழுதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் செய்து சாப்பிடுவோம். இரவு மீதமாகிய இட்லியை உடைத்து உப்புமாவா செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் பலர் செய்தும் சாப்பிட்டிருப்போம். ஆனால், மீதமான சப்பாத்தியில் உப்புமா செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று எப்படி சப்பாத்தி உப்புமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தாளிக்க : முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பில்லை, உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். அதன் பின்பு இவற்றுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவை : வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
உப்புமா : இறுதியாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள சப்பாத்திகளை இந்த கலவையுடன் சேர்த்து 5 நிமிடம் நன்றாகக் கிளறவும். அதன் பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சப்பாத்தி உப்புமா தயார்.
சென்னை : தமிழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை…
டெல்லி : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25, 2025) மாநிலங்களவை உறுப்பினராக…
சென்னை : வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த…
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், உடல் எடையை குறைப்பதற்காக யூடியூப்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்,…
ஜார்ஜியா : வரலாற்றில் முதன்முறையாக, மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள், கோனேரு ஹம்பி மற்றும்…