10 ஆண்டுகள் கழித்து பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்ததாகவும், விரைவில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து நடிகர் கார்த்திக் அவரது அடுத்த படத்தை இயக்குனர் மித்ரன் டைரக்ட் செய்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. பிஎஸ் மித்ரன் இரம்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளராக சிங்கம் 2 மற்றும் தேவ் படத்தை தயாரித்த லட்சுமண் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது .ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணிகள் கிட்டதட்ட முடிந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை என்னும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. விரைவில் கார்த்தி – மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…