பிரபல தமிழ் நடிகரின் வீட்டில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்.!

Published by
Ragi

ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் அறிவித்திருந்தார். சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும்  கொரோனா  பரிசோதனை செய்யவும், கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லையென்றாலும் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் பல தமிழ் திரைப்படங்களில் நடித்த ராதாரவி நீலகிரி மாவட்டத்தில்  கோத்தகிரியில் உள்ள சொந்த வீட்டில் தனது 8 உறவினர்களுடன் கடந்த 10ம் தேதி வந்துள்ளார். உடனே அந்த பகுதி மக்கள் கோத்தாகிரி வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்த நிலையில், ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் அவர்கள் யாவரையும் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதோடு, ராதாரவியின் வீட்டின் முன்பு தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கரையும் ஒட்டியுள்ளனர். இதனால் கோத்தாகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Published by
Ragi

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

24 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago