ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா என்று தகவல்கள் பரவி வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 13 ஆம் தேதி வெளியானது. டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் , இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில், வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா என்று தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால், சார்பட்டா பரம்பரை படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், ஆர்யாவை மெட்ராஸ் படம் இயக்கும் போதில் இருந்து எனக்கு தெரியும். ஆர்யா எனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். ஆர்யாவிற்கு முன் சில நடிகர்களிடம் சார்பட்டா பரம்பரை படத்தின் கதையில் நடிப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால் கடைசியில் படத்தில் நடிக்க ஆர்யாவே தேர்வானார்” என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…