இத்தனை நாட்களாக இது போல ஒரு கதைக்காக தான் காத்திருக்கிறேன் ! வெயில் படநாயகியின் ஓபன் டாக் !

ராஜா கஜினி இயக்கி தயாரிக்கும் படம் “உற்றான் ” .இந்த படம் 1994 ஆண்டு ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக நடிகை ஹிரோஷினி கோமலி நடிக்கிறார்.
இந்த படத்தில் “வெயில்” படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நாயர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் பற்றி இயக்குநர் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த கதையை முதலில் நடிகை பிரியங்கா நாயரிடம் கூறினேன். உடனே அவர் இப்படி ஒரு கதைக்காக தான் நான் இத்தனை நாட்களாக காத்து கொண்டிருக்கிறேன் என்று கூறியதாகவும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ -என்ட்ரி கொடுக்க நல்ல வாய்ப்பாக அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை இயக்குநர் ராஜா கஜினி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025