ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்திலிருந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள சண்டைக்காட்சி ஒன்று இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது.
எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும், சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு செல்கிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஒரு சண்டைகாட்சி இணையதளங்களில் லீக்காகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இருவரின் வாழ்க்கை வரலாற்று கதையாக உருவாகும் இந்த படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். அவர் காட்டில் புலியுடன் சண்டையிடும் சில நொடி காட்சிகள் தான் லீக் ஆகியுள்ளது. இதனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பெரும் அதிருப்தியில் உள்ளனராம்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…