காஜல் அகர்வால் அடுத்ததாக கல்யாண் இயக்கும் கோஸ்ட்டி எனும் படத்தில் 24 காமெடி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று,அவர்களது ஹனிமூன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதும் ,அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின் 24 காமெடி நடிகர்களுடன் இணைந்து ஒரு ஃபேண்டஸி ஹாரர் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது .ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்திற்கு “கோஸ்ட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் ,இதனை கல்யாண் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது .இவர் ஜாக்பாட்,குலேபகாவலி ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் யோகி பாபு,மொட்ட ராஜேந்திரன் , ஸ்ரீமன் , தேவதர்ஷினி,ஊர்வசி ,டோனி உள்ளிட்ட 24 காமெடி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும்,மேலும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…