உலகப் புகழ்பெற்ற மீம்ஸ்களின் அரசன்…’கபோசு’ மரணம்!

Published by
பால முருகன்

கபோசு : மீம்ஸ்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu)  நாயையும் முக்கிய இடத்தில் இருக்கும் என்றே கூறலாம். இந்த நாய் கொடுக்கும் ரியாக்ஸன் மனிதர்கள் போலவே காமெடியாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் பிரபலமானது. பலரும் இதனை மீம்ஸ்களின் ராஜா என்று கூட கூறுவார்கள்.

அந்த அளவுக்கு பல வகை ரியாக்சன் கொடுத்து நம்மளை மீம்ஸ் மூலம் சிரிக்க வைத்த கபோசு அனைவரையும் தூக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.  அதாவது, இன்று காலை 7:50 மணியளவில் கபோசு உடல்நல குறைவால் உயிரிழந்தது. 17 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரமான செய்தியை கபோசுஅதன் உரிமையாளர் செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து உரிமையாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் ” வழக்கம் போல நேற்று இரவு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு தூங்கும்போதே அவள் உலகத்தை விட்டு பிரிந்து சென்றால்..  உலகத்தில் அதிக அன்பை பெற்றுக்கொண்ட நாய் என்றால் இது தான். அதைப்போல, அவளைப் பெற்ற மகிழ்ச்சியான நபர் நான் தான்” எனவும்  பதிவிட்டுள்ளார்.

கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், கபோசுவின் இறுதிசடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை கோட்சு நோ மோரியில் உள்ள ஃப்ளவர் கௌரியில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2008ம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஒருவர் இந்த நாயை வளர்த்து வந்த நிலையில், இதனை வைத்து 2010-ஆம் ஆண்டு போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிட்டபோது பிரபலமாக தொடங்கியது. அதன்பிறகு, இந்த நாய் கொடுத்த ரியாக்ஸன் மூலம் மிகவும் வைரலாக 2013ம் ஆண்டில் இதனுடைய படத்தை அதன் லோகோவாகப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoin உருவாக்கவும் தூண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

29 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago