நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படமும் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாவதாக தகவல்.
கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படமும் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூல் சாதனை செய்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்பொழுது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து விட்டததாக கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் மீண்டும் நடிகர் கார்த்தி திரைப்படமும் விஜய் படமும் ஒரே நாளில் வெளியவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் கடந்த ஆண்டு கார்த்தியின் கைதி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…
இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…
திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…