கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவனம், தனது அனைத்து மாடல்கள் பைக்குகள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது.
ஆஸ்திரியா நிறுவனமாக கேடிஎம், இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் கேடிஎம் பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பஜாஜ் நிறுவனம், கேடிஎம் மட்டுமின்றி, ஹஸ்க்வர்னா பைக்குகளையும் இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் கேடிஎம் பைக்குகள், இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று, பலரின் கனவு பைக்காக மாறியுள்ளது.
மேலும் ஹஸ்க்வர்னா, கடந்தாண்டு தனது ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 பைக்குகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில், இம்மாத தொடக்கத்தில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகள் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 250 பைக்கின் விலை, ரூ.1,86,750 என இருந்தது. இதன் விலை, தற்பொழுது ரூ.2,818 வரை உயர்ந்து, ரூ.1,89,568-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதன் மற்றொரு மாடலான விட்பிளேன் 250, ரூ.1,87,136 என இருந்த நிலையில், ரூ.2,816 வரை அதிகரிக்கப்பட்டு ரூ.1,89,952-க்கு விற்கப்பட்டு வருகிறது.
மேலும் கேடிஎம் பைக்குகள் விலை, ரூ.1,402-ல் இருந்து ரூ.4,485 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேடிஎம் டியுக் 125-யின் விலை, ரூ.1,402 ஆக அதிகரிக்கப்பட்டு, ரூ.1,51,507 ஆக அதிகரிக்க பட்டுள்ளதாகவும், ஹையர் வேரியண்டான 390 அட்வென்ச்சரின் விலை ரூ.4,485 அதிகரிக்கப்பட்டு, ரூ.3,10,365-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…