மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பர்த்டே ஸ்பெஷல்.! ‘தலைவி’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு இன்று.!

மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை 6.35 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் .
விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள இந்த படத்தின் ஸ்டில்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இன்று முன்னாள் முதல்வரும் ,நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை 6.35 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர் .
On #Thalaivi‘s 73rd birth anniversary, stay tuned as we make an important announcement at 6:35 PM today! @thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 #Jayalalitha @KarmaMediaent @TSeries @vibri_media #SprintFilms #GothicEntertainment @Thalaivithefilm
— Kangana Ranaut (@KanganaTeam) February 24, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025