காட்டேரி படத்திலுள்ள ‘என்ன பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா மற்றும் மங்காத்தா படங்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதனையடுத்து மேயாதமான் உட்பட பட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘காட்டேரி’. டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் பேனர்ஸின் கீழ் K. E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ‘என் பேரு என்ன கேளு’ என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு நடிகை காஜல் அகர்வால் அவர்களால் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஸ்ரீகாந்த் வரதன் எழுத ஜோனிட்டா காந்தி பாடியுள்ளார்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…