கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.ரூ. 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்காகவும், ரூ.50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காகவும் அளித்துள்ளார்.ரூ. 50 லட்சத்தை ஃபெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்திற்கும், ரூ.50 லட்சத்தை நடன சங்கத்திற்கும், ரூ.75 லட்சத்தினை தினக்கூலி தொழிலாளர்களுக்கும் அளித்துள்ளார். ரூ.25 லட்சத்தினை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கும் பிரித்து கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஏற்கனவே நடிகர் அஜித் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…