ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ருத்ரன் என்று வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று படக்குழு அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸின் 44 வது பிறந்த நாளை அவரது ரசிகர்களை கொண்டாடி வருகிறார்கள்.
மேலும் பல சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நடிகர் லாரன்ஸ் அனைவர்க்கும் நன்றி தெரிவித்தும், தனது ரசிகர்களுக்கு அடுத்த படத்தின் அப்டேட் கொடுக்கும் வகையிலும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் “வணக்கம் நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, இதோ எனது அடுத்த பட தலைப்பு தலைப்பு இதுதான் . எனது பிறந்தநாளில் இதை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. உங்கள் எல்லா ஆசீர்வாதங்களும் எனக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழ் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…