பைக் விபத்தில் சிக்கிய முன்னணி நடிகர் சாய் தரம் தேஜ்..!

முன்னணி தெலுங்கு திரைப்பட நடிகர் சாய் தரம் தேஜ் பைக் விபத்தில் காயமடைந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு வலது கண், மார்பு மற்றும் அடிவயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.