நேற்று கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் vs வைல்ட் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் , பேர் கிரில்ஸ் கலந்து கொண்டனர். ஷூட்டிங்கின் போது ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதையெடுத்து நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் ரஜினி செய்தியாளர்களிடம் சந்தித்தபோது, தனக்கு ஷூட்டிங்கில் காயம் ஏதும் ஏற்படவில்லை அங்கே புதர்கள் அதிகம் இருந்ததால் அதில் இருந்த சிறு முட்கள் மட்டுமே குத்தியது என கூறினார்.
டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி மேன் vs வைல்ட் . இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி உயிர் பிழைப்பது ,எப்படி காட்டுக்குள் உயிர் வாழ்வது போன்றவை பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , பியர் கிரில்ஸ் உடன் காட்டுக்குள் பயணம் மேற்கொண்டார்.இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை போல பியர் கிரில்ஸியுடன் “மேன் vs வைல்ட்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…