உடனடி தொடருக்கு தகுதியான படம் மங்காத்தா என வெங்கட் பரப்பு ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில், சென்னை 28 இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதனை தொடர்ந்து சரோஜா, கோவாம் போன்ற படங்களை இயக்கியனார். அடுத்ததாக அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மிரட்டலான படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். அவரது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் இது தான் என்று கூறலாம்.
ஆக்ஷ்ன் கலந்த க்ரைம் திரைப்படமாக உருவாகி இருந்தது. இசையமைப்பாளர் யுவனின் பின்னணி இசை அஜித்தின் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படியாக அமைந்தது. ரசிகர்களுக்கு மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.
இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது தான் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது, கிடைத்த தகவல் என்னவென்றால் சமீபத்தில், ஊடக பதிவில் ஒரு உடனடி தொடருக்கு தகுதியான படம் என்ற கேள்வி கேட்கப்பட்டது.? அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு “மங்காத்தா” என பதிலளித்துள்ளார். இதனால் மங்காத்தா 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…