தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், சந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ,கர்நாடகா மாநிலம் ஷிமோகா என்று பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால் இந்த இரண்டு போஸ்டரிலும் விஜய் மட்டுமே இருந்தார்.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி இல்லை. இந்நிலையில் இன்று குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி நேற்று படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பில்,மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று படத்தின் மாஸான மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்தபடி வெளியான மிரட்டலான லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…