நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து நடித்து உள்ள படம் மாஸ்டர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இன்று நடைபெற உள்ளது.இந்நிலையில் நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி ரெய்டு’ என்கிற 3வது பாடலை நேற்று படக்குழுவானது வெளியிட்டது. இப்பாடலை ராப் பாடகர் அறிவு எழுதி அதை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இசையமைப்பாளர் அனிருத்தும் பாடியுள்ளார். ஏற்கெனவே 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இரவு வெளியான “வாத்தி ரெய்டு” பாடலும் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முழு ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.அதில் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அதில் ‘அந்த கண்ண பாத்தாக்கா’ quit பன்னுடா என்னும் 2 பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதில் மேலும் ஒரு சிறப்பாக இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா ‘அந்த கண்ண பாத்தா’ எனும் பாடலையும், ‘சந்தோஷ் நாராயணன் ‘பொலக்கட்டும் பரபர’ என்கின்ற பாடலையும் பாடி உள்ளனர்.3 இசையமைப்பாளர்கள் மற்றும் விக்னேஷ் என்று இனைந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை ஆல்பம் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…