ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்துக்கான முதற்கட்ட சோதனைக்கு 2 தன்னார்வலர்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனாவுக்கு மருந்து கண்டறிய உலக நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாரா கில்பர்ட் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கொரோனா தடுப்பதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் முதற்கட்ட சோதனை செய்யவதற்கு நல்ல உடல்நலமுள்ள தன்னார்வலர்கள் வரலாம் என அழைப்பு விடுத்தனர்.
அதன் படி, 2 தன்னார்வலருக்கு இந்த தடுப்பூசி உட்படுத்தி சோதனை செய்யப்பட்டது. இவ்வாறு வரும் தன்னார்வலர்களுக்கு சன்மானமாக இந்திய மதிப்பில் 58,700 ரூபாய் வழங்கப்படுமாம். அடுத்த மாத மத்தியில் மேலும் 500 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளதாம். இந்த சோதனை வெற்றிகண்டால் கொரோனாவை வெல்ல 80 சதவீதம் வாய்ப்புள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை கூறியுள்ளனர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…