சீனாவுக்குச் சொந்தமான பிரபல செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படும் என கூறிய நிலையில், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட், பைட்டான்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் கூறப்பட்டது.
நேற்று மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த பேச்சு வார்த்தைகளை நிறுத்தியுள்ளது எனவும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதாக கூறி வெள்ளை மாளிகை ஆதரவைப் பெற பைட்டான்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மைக்ரோசாப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், மைக்ரோசாப்ட் , சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதிப்படுத்தியது. டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…