பொய்களை பரப்புவதாக டிரம்பின் பேட்டியை நிறுத்திய அமெரிக்க செய்தி நிறுவனங்கள்

Published by
Venu

அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்தியுள்ளது.

உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக  கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.இதற்கு இடையில் டொனால்ட் டிரம்ப்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஜனநாயக கட்சியினர் வாக்குகளை சட்டவிரோதமாக எங்களிடம் இருந்து திருட முயற்சி செய்கின்றனர் எனக் கூறினார்.பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த டிரம்பின் இந்த செய்தியாளர் சந்திப்பு சுமார் 17 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்றது.ஆனால் திடீரென்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.டிரம்ப் தவறான செய்திகளை கூறுவதாகவும், பொய்களை பரப்புவதாகவும் பேட்டியை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சில செய்தி நிறுவனங்கள் மட்டும் டிரம்பின் முழு பேட்டியை ஒளிப்பரப்பு செய்ததாக கூறப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

36 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago