நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார்.இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.இதில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது. ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது,முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர் . இதன் விளைவாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஸ்டாக் மூலமாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். குறிப்பாக விஜய் சேதுபதி ,முரளிதரன் வேடத்தில் நடிக்கக்கூடாது என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் டிவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஸ்டாக் நேற்று ட்ரெண்டாகியது.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில், எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா முரளிதரன்.தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்.விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…