இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் கதையை வைத்து மையமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது . இந்த அற்புதமான படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், மாஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த பிரணிதா படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பது ‘காஷ்மீர் பண்டிட்டுகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்த இதயத்தை உலுக்கும் உண்மையை அறிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படம் தி காஷ்மீர் . படத்தின் முடிவில் நானும் என் கணவரும் கண்ணீருடன் இருந்தோம்.. நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால் தயவுசெய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…