நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்குகிறது.
இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், செல்வராகவன் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ், திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…