அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு கடந்த மே மாதம் ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகியோரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதங்களாக தங்கி ஆராய்ச்சி செய்து வந்த நிலையில், ராபர்ட் எல். பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஜி. ஹர்லி ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புதிய க்ரூ டிராகனில் மூலம் சனிக்கிழமை பூமிக்கு புறப்பட்டனர்.
சுமார் 21 மணி நேரம் பயணம்செய்த நிலையில் இன்று அதிகாலை மெக்ஸிகோவின் வளைகுடா கடல்பகுதியில் இருவரும் தரையிறங்கினர். பின்னர் படகு மூலம் கடற்கரைக்கு இருவரும் அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்பிளாஷடவுன் என்றுஅழைக்கப்படும் தண்ணீரில் தரையிறங்குவதை நாசா வெற்றிகரமாக செய்துள்ளது.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…