#FASTag ரிசார்ஜ் செய்ய வேண்டுமா? இதோ! எளிமையான மூன்று வழிகள்!

Published by
Surya

ஃபாஸ்ட் டேக் ரிசார்ஜை எளிமையாக தற்பொழுது, UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்து கொள்ளலாம். அது எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம்.

சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், மக்களின் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை, “ஃபாஸ்ட் டேக்” முறையை அமல்படுத்தியது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். நமது வாகனம், சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும்.

இதற்கு நாம் ரிசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல எளிமையான முறைகள் இருக்கும் நிலையில், உங்களின் UPI அல்லது BHIP பேமெண்ட் மூலமாக உங்களின் மொபைலில் நீங்களே செய்துகொள்ளலாம். குறிப்பாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலமாக சுலபமாக ரிசார்ஜ் செய்துகொள்ளலாம். அதன்படி எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து காணலாம்.

கூகுள் பே:

  • முதலில் உங்கள் மொபைலில் கூகுள்-பே செயலியை ஓபன் செய்யவும்.
  • அதில் Business & Bills-ஐ கிளிக் செய்து, மெனுவில் explore-ஐ கிளிக் செய்க.
  • அதில் இருக்கும் சர்ச் பாரில் “FASTag” என சர்ச் செய்து, அதில் வழங்கப்பட்டருக்கும் வங்கியில் உங்களிடம் இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்.
  • உங்களின் கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, அதற்கான கட்டணத்தைச் செலுத்துங்கள்.
  • இவ்வாறு செய்தால், கூகுள் பே மூலம் நீங்கள் எளிதாக ரிசார்ஜ் செய்யலாம்.

போன் பே:

  • போன் பே செயலியை ஓபன் செய்து, FASTag Recharge என்பதை தேர்வு செய்யவும்.
  • அதில் வழங்கப்பட்டிருக்கும் வங்கி பட்டியலிலிருந்து, உங்களிடம் இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்.
  • அதன்பின் கார் எண் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு, FASTag ஐ ரீசார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்கள்.
  • அவ்வாறு செய்தால், உங்கள் FASTag இப்போது ரீசார்ஜ் செய்யப்பட்டது.

பேடிஎம்:

  • பேடிஎம் செயலியை ஓபன் செய்து, மெயின் மெனுவில் உள்ள Show more விருப்பத்தை கிளிக் செய்து, FASTag Recharge-ஐ தேர்வு செய்யவும்.
  • அதில் வழங்கப்பட்டிருக்கும் வங்கி பட்டியலிலிருந்து, உங்களிடம் இருக்கும் வங்கியை தேர்வு செய்யுங்கள்.
  • அதன்பின் உங்களின் அனைத்துவிபரங்களையும் உள்ளிட்டு, உங்கள் ஃபாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்து பணம் செலுத்துங்கள்.
Published by
Surya

Recent Posts

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

7 minutes ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

41 minutes ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

1 hour ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

1 hour ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

2 hours ago

பிரதமர் மோடியே வரவேற்று 3 கோரிக்கைகளுடன் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி.!

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…

2 hours ago