உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான போரின் விளைவாக பல நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதித்து வருகிறது. மேலும், சில நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன. இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் ரஷ்யாவில் அதன் எதிர்கால திட்டங்களை (ரஷ்ய படங்களை தயாரிப்பதையும், வெளிடுவதையும்) தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் ரஷ்ய மொழியை சேர்ந்த 4 சீரிஸ்கள், புரொடக்ஷன் மற்றும் போஸ்ட் புரடக்ஷன் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் டாஷ் ஜூக் இயக்கிய க்ரைம் த்ரில்லர் தொடர் அடங்கும். இவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…