அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியை பெறுவதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதி சீட்டில் தனது பெயரை அச்சிட அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.91,000 நேரடி வரவு வைப்பாகவும், காசோலையாகவும் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த பணிகள் தாமதமாகும் என்று வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அளிக்கப்பட உள்ள 91 ஆயிரம் ரூபாய் காசோலையில் தனது பெயரை அச்சிட்டு தர அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதே இதற்கு காரணம் என வாசிங்டன் போஸ்ட் கூறியுள்ளது. இதற்கேற்ப கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் மாற்றி ட்ரம்ப் பெயர் அச்சிடப்பட்ட பிறகே, அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அமெரிக்கா அதிபரின் பெயர் இவ்வித நிவாரண காசோலைகளில் அச்சிடப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும் தொற்றால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ட்ரம்ப் கையாளும் விதம் பற்றி அமெரிக்க ஊடங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 6,14,246 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 26,064 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…