புஷ்பா திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 06.12 மணிக்கு படக்குழுவினர் வெளியீடவுள்ளனர்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் “புஷ்பா”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடித்துவருகிறார். தேவ ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடித்து வருகிறார்.
புஷ்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதும்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான அல்லு அர்ஜுன் அறிமுக காட்சியை டீசராக இன்று மாலை 06.12 மணிக்கு படக்குழுவினர் வெளியீடவுள்ளனர். மேலும் நடிகர் அல்லு அர்ஜுனிற்கு நாளை பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…