இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும், நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால், இலங்கை அரசு இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பலமடங்கு அதிகரித்து உள்ளது. அதிலும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் 6 மணி முதல் 8 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. இன்று அந்த மின் வெட்டு 10 மணி நேரம் வரை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலை தரையிறக்க முடியவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது.
தட்டுப்பாடின்றி பெட்ரோல் வினியோகம். சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில், இன்றும், நாளையும் டீசலை பெறமுடியாது. இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும், நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் பெட்ரோலிய கூட்டமைப்புத் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…