,

என்னை விட யாரும் ஐஸ்வர்யா கேரக்டரை நல்ல பண்ண முடியாது-செம்பருத்தி ஜனனி .!

By

என்னை விட யாரும் செம்பருத்தி சீரியலில் வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை நன்றாக பண்ண முடியாது என்று ஜனனி தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரில் மிகவும் பிரபலமான தொடர் செம்பருத்தி.  இதில் அகிலாண்டேஸ்வரியாக பிரியா ராமன் ,இரண்டு மகன்களாக கார்த்திக் ராஜ்,கதிர் மற்றும் இருண்டு மருமகள்களாக ஷபானா மற்றும் ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் .

சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ஜனனி விலகியதாக தனது யூடுயூப் சேனனில் அழுது கொண்டே வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் .அதில் இனி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும், கால்ஷீட் பிரச்சினை காரணமாக செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கியதாகவும் ,,  ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றும், இனி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு ஆதரவு கொடுங்கள் என்றும்,  திடீரென நீக்கப்பட்டது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி கதறி அழுதிருந்தார் .

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் விளக்கமளித்த ஜனனி ,லைவ்வில் ரசிகர்களிடம் அழகு குறிப்புகள் பேசி கொண்டிருந்த போது செம்பருத்தி தொடரில் இருந்து தனக்கு போன் செய்து ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்ற கூறிய போது ஏற்று கொள்ள முடியாமல் அழுததாகவும், அன்று முழுவதும் தான் அழுததாகவும்,  விரைவில் அதிலிருந்து வெளி வருவேன் என்றும் , தனக்கு அந்த தொடர் நிறைய கற்று தந்ததாகவும் , நண்பர்களை தான் அதிகமாக மிஸ் பண்ணுவேன் என்றும் கூறினார் . மேலும் கூறிய அவர் அந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தன்னை தவிர யாராலும் நன்றாக பண்ண முடியாது என்று தெரிவித்துள்ளார் . மேலும் தான் அழுத போது எனக்கு ஆதரவளித்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Dinasuvadu Media @2023