தனுஷ் அவர்கள் இரண்டாவதாக இயக்கும் தான் ருத்ரன் படத்தின் வரலாற்று பகுதிகளை இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ். நடிகர் மட்டுமில்லாமல் இயக்குநராகவும் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு ‘பா. பாண்டி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கி வரவேற்பைப் பெற்றார். அதனையடுத்து அவர் இயக்கிய சரித்திர படம் தான் ‘நான் ருத்ரன்’. இந்த படத்தில் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, சரத்குமார், அதிதி ராவ், அனு இம்மானுவேல், எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருந்தார்கள். சில நாட்கள் படப்பிடிப்புகள் நடந்த இந்த படம் சில பொருளாதார பிரச்சினை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தனுஷ் இந்த படத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது. மேலும் 15 நூற்றாண்டில் அமைந்திருக்கும் கதை களத்தை கொண்ட வரலாற்று படத்தை ரூ. 70கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாகவும் நேர்காணல் ஒன்றில் தனுஷ் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தனுஷ் அவர்கள் இரண்டாவதாக இயக்கும் நான் படத்தின் வரலாற்று காட்சிகளை தனது சகோதரரான செல்வராகவனுடன் இணைந்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் செல்வராகவன் ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் உள்ளிட்ட வரலாற்று படங்களை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவருடன் இணைந்து வரலாற்று பகுதிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…