நேற்று மட்டும் 150 பேர் பலி.! உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கொவிட்-19 வைரசால் நேற்று மட்டும் 150 பேர் உயிரிழந்து, உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592-ஆக உயர்ந்தது.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் நேற்று மட்டும் 150 பேர் உயிரிழந்து, உலக முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2,592-ஆக உயர்ந்தது. மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,000-ஐ எட்டியுள்ளது என உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீனாவை தொடர்ந்து தென் கொரியாவில் கொவிட்-19 வைரசுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 161 பேருக்கு இந்த சைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 763-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை ‘ரெட் அலார்ட்’ ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

25 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago