கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதையும் 4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று நான் கூறியதற்கு, சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்தனர்’ என்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பா சிதம்பரம் நாடு முழுவதையும், 2 -4 வாரங்களுக்கு முடக்க வேண்டும் என, கடந்த ஒரு வாரமாக கூறி வருகிறேன். ஆனால் சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்கின்றனர். இத்தாலியிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கடும் நடவடிக்கைகள் தான் கொரோனா பாதிப்பை தடுக்கும் என்றும் மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவை வரவேற்று பதிவிட்டுள்ளார்.அதில் என் போன்றோரின் யோசனையை ஏற்று, மாநிலம் தழுவிய முழு ஊரடங்கை அறிவித்த, தமிழ்நாடு உட்பட்ட மாநில அரசுகளுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் நன்றி. இந்த முழு ஊரடங்கைக் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். மிக முக்கியமாகப் பெரிய கிராமங்கள், பேரூர்கள், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இவற்றை கடுமையாக செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தயக்கம் காட்டினாலும் தமிழக அரசு துணிவுடன் செயல்படவேண்டும். என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…