கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கும் பாவ கதைகள் தொடரை வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஓடிடி தளத்திற்காக ஆந்தலாஜி படங்களை இயக்கி வந்தனர் .அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற பெயரில் ஒரு அந்தலாஜி வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் தளத்திக்ற்காக இயக்கி வந்தனர் .
இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் “லவ் பண்ணா உட்ரணும்” என்ற பகுதியில் அஞ்சலி மற்றும் கல்கி கோச்லின் நடித்துள்ளனர்.தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அஞ்சலி மற்றும் கல்கிக்கு நன்றியை தெரிவித்ததுடன் பாவக்கதைகள் தொடரின் டிரைலரை டிசம்பர் 3-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் , படத்தினை நெட்ஃபிளிக்ஸில் 18-ம் தேதி வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார் .
மேலும் இந்த வெப் சீரிஸில் வெற்றிமாறன் இயக்கும் பகுதிக்கு “ஓர் இரவு” என்று பெயரிடப்பட்டுள்ளது .அதில் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர் .அதே போன்று சுதா கொங்கரா இயக்கும் பகுதிக்கு “தங்கம்” என்று பெயரிடப்பட்டுள்ளது .அதில் பவானி ஸ்ரீ,சாந்தனு , காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளனர் .மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் பிரிவுக்கு “வான்மகன்”என்று பெயரிடப்பட்டுள்ளது.அதில் சிம்ரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர்.இந்த வெப் சீரிஸ் வரும் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…