பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருந்து சர்கோதா நகருக்கு மில்லட் எனும் எக்ஸ்பிரஸ் ரயில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் அதே சமயம் ராவல்பிண்டி நகரில் இருந்து காராச்சி நோக்கி சையத் எனும் எக்ஸ்பிரஸ் ரயில் 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. மில்லட் ரயில் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள தார்கி என்ற இடத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ரயில் தடம் புரண்டதால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பாய்ந்து உள்ளது.
அதே சமயம், அருகில் உள்ள தண்டவாளத்தில் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலுடன் மில்லட் ரயிலின் பெட்டிகள் மோதியதில் இரு ரயில்களும் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் மில்லட் ரயிலில் இருந்த 14 பெட்டிகள் கவிழ்ந்ததால் பல பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதல் கட்டமாக இந்த விபத்தில் 50 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.மேலும், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 13 அதிகரித்து மொத்தம் 63 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…