கடந்த 19 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசு உதவியோடு தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் ஒப்பந்தத்தை தலீபான் பயங்கரவாதிகள் ஏற்றுக்கொண்டனர். அமெரிக்காவும் ஒப்பந்தத்தை ஏற்க இருந்த நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் நடந்திய தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர். இதனால் கோபம் அடைந்த டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூறினார்.
இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு பயணமாக சென்ற டிரம்ப் மீண்டும் தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கியதாக கூறினார்.பின்னர் கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலீபான் பிரதி நிதிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.இதையெடுத்து சில தினங்களுக்கு முன் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அமெரிக்கா- தலீபான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதன்படி அமெரிக்கா தனது அனைத்துப் படைகளையும் ஆப்கானிஸ்தானில் 14 மாதங்களில் திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் எண்ணிக்கை 8,600 ஆகக் குறைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…