பாலிவுட் இயக்குநருடன் அடுத்து இணைகிறாரா…? மக்கள் செல்வன்.!

விஜய் சேதுபதி ஊரடங்கில் வெப் சீரிஸ் மற்றும் குறும்படம் என்று பிஸியாக நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெஜோய் நம்பியார் இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . இந்த படங்களை தொடர்ந்து காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும், கடைசி விவசாயி, கா பே ராணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில், அவர் விரைவில் இரண்டு வெப் சீரிஸ்களில் நடிக்கவுள்ளதாகவும், அதனை குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் அவர் குறும்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பெஜோய் நம்பியார் இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதற்கான வேலைகளில் விரைவில் இறங்கப் போவதாகவும் கூறியுள்ளார். பெஜோய் Davide, solo, shaitan உள்ளிட்ட பாலிவுட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி ஏற்கனவே தனது மகள் மற்றும் ரெஜினா கெசன்ட்ராவுடன் ஒரு மணிநேர குறும்படம் ஒன்றை நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025