கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70 % விகிதம் முடிவடைந்துள்ளது.
இன்னும் 30 % படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் படத்திற்கான படப்பிடிப்பை நிறுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தவுடன் படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியீட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, ,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…