“வலிமை” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக படகுழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் மீது ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் திரையில் பார்ப்பதற்கு எதிர்பார்த்து காத்துகொண்டியிருக்கிறார்கள். இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அஜித்குமார் ரசிகர்களுக்கு 2 வருட காத்திருப்பிற்கு பலனாக வரும் ஜனவரி 13-ஆம் தேதி “வலிமை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக “வலிமை” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக படகுழு அறிவிக்கப்பட்டுள்ளது. “வலிமை” திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருந்தது.
ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் உருவான “RRR” திரைப்படமும் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…