பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும்,பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது .
மேலும் இந்த படத்தினை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. ராமாயணம் கதையை தழுவி உருவாக உள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் , பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த திரைப்படத்தில் சீதையாக நடிப்பது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.ஆனால் அதற்காக பல நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது.அந்த வகையில் தற்போது வெளியான புது தகவலின்படி,ஆதிபுருஷ் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…