கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் மேலும் ஒரு நடிகர் இணைந்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.
காரைக்குடியில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஷிவானி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இந்த படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். நரேனும் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் நரேன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…