விஷாலின் 31வது படத்தில் இணைகிறார் நடிகை பிரியா பவானி சங்கர் .
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாபியா. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம் ஆகிய பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் விஷால் நடிக்கும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் கலந்த அந்த படத்தை ஜெயம்ரவியின் ‘அடங்காமறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளார் என்றும், கதிரேசன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…