கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்ததாகவும், அதனை தனது மகளுக்கு செலுத்தியதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசிகளை அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்ததற்கு அந்நாட்டு அதிபர் புதின் பெருமிதம் கொண்டார். மேலும், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட தகவலை ரஷ்ய அமைச்சர்களுக்கு காணொலி வாயிலாக இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் அந்த தடுப்பூசியை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அந்த தடுப்பூசிகள், செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…