அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் நயன்தாராவும், ரஜினியும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக 1 வாரம் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்க்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது, ஆனால் ரஜினிக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்கு பிறகு இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் உடல்நலக் குறைபாடு காரணமாக ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.
இந்த திரைப்படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். மேலும் ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…