உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் குறையாத தனது வீரியத்துடன் உலகை உலுக்கி வருகிறது.
உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 13,448,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 580,349 பேர் உயிரிழந்துள்ளனர், 7,841,591 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 217,917 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,413 பேர் கொரோனாவால் உயிரிழந்துமுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 5,026,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்கள் உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைந்து கொண்டே தான் வந்தது. ஆனால், இன்று உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் பழைய இயல்பு நிலையை அடைய முடியாது எனவும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார். கொரோனவின் தாக்கத்தை ஒழிக்க விழித்திருப்போம், தனித்திருப்போம், கொரோனாவுக்கு எதிரான போரில் மட்டும் மனதளவில் இணைந்திருப்போம்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…