தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக தலைவராக ஆர்கே செல்வமணி தேர்வாகியுள்ளார்.இதுகுறித்து பெப்சி வெளியிட்ட அறிக்கையில்,
பெப்சி என்றழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் 2021-9023ம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆர்.கே.செல்வமணி தலைவராகவும், அங்கமுத்து சண்முகம் பொதுச்செயலாளராகவும், பொருளாளராக பி.என்.சுவாமிநாதனும் மூன்றாவது முறையாக ஏகமனதாக போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
இவர்களுடன் துணைத்தலைவர்களாக தினா, ஜே.ஸ்ரீதர், எஸ்.பி.செந்தில்குமார், வி.தினேஷ்குமார், தவசிராஜ் இணைச்செயலாளர்களாக ஏ.சபரிகிரிசன், ஏ.சீனிவாசமூர்த்தி, ஏ.புருஷோத்தமன், ஜி.செந்தில்குமார், கே.ஸ்ரீபிரியா ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.இராமசாமி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பி.ஆர்.ஒ.யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் வாழ்த்தினர்.சில தினங்களில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…