உருகுவேவில் ரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்.!

- உருகுவேவில் 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள் கடற்படை , சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- 4.4 டன் எடை கொண்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி என தகவல்.
உருகுவே நாட்டில் அதிகமாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும், சுங்க அதிகாரிகளும் துறைமுக நகரான மொண்டே வீடியோ நகரில் உள்ள துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது சோதனையில் ஈடுபட்டபோது அதிகாரிகள் சோயா மாவு டப்பாக்களை திறந்து பார்த்தபோது அதில் 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.
இந்த 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள்களை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லோமுக்கு கடத்த முயற்சி செய்து உள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி) என தகவல்கள் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள்களை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்துவதற்கு உருகுவே நாட்டை தான் மையமாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த நவம்பர் மாதம் இதே மொண்டேவீடியோ நகரில் 3 டன் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025